பொதுவாக இந்துப் பண்பாட்டில் பெண் பற்றி ஆடவர் கட்டி எழுப்பிய உயர்ந்த / தாழ்ந்த புனைவுகள் யாவும் பெண்ணின் உடலை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காணலாம். பெண்ணின் உடல்வகைச் செயல்பாடுகளாகப் பாலியல் மற்றும் பணிவிடைச் செயல்பாடுகள் என இருவிதச் செயல்பாடுகள் வரையறுக்கப் பட்டுள்ளன. இவை இரண்டும் ஆணின் உடல் சார்ந்த பாலியல் மற்றும் பாலியல் அல்லாத இருவகை நுகர்ச்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. ஆணின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்கிற பெண்ணின் உடல்மீது ஒருவகையான புனைவுகளும், அவனுடைய வயிற்றுப் பசியைத் தீர்க்கவும், வீட்டைப் பராமரிக்கவும், அவனது குழந்தைகளை வளர்க்கவும் உழைக்கும் பெண்ணின் உடல்மீது மற்றொருவிதமான புனைவுகளும் ஆண்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
பெண்ணியப் பார்வை- க. பரிமளம்
₹60.00Price

