அழகிய பெரியவன் எழுத்துக்கள் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை கூரிய சமூகவியல் பார்வையுடன் சித்தரிக்கின்றன. தேர்ந்த மொழியுடன் அது அகவயமாகப் பயணிக்கும்போது மனிதகுலத்தின் நிரந்தரக் கேள்விகள் மீண்டும் எழுகின்றன. நேர்மையும் தீவிரமும் கொண்ட இவ்வெழுத்துக்கள் இளைய தலைமுறைப் படைப்பாளர்களில் இவரை தனித்த அடையாளம் உள்ளவராக ஆக்குகின்றன.
அழகிய பெரியவன் தலித் சிந்தனையாளர், சமூக மாற்றத்திற்கான இயக்கங்களில் நேரடிப் பங்களிப்பவர். சிறந்த மேடைப் பேச்சாளர். 36 வயதாகும் இவர் பேரணாம்பட்டில் தனியார் பள்ளி ஆசிரியர்.
வெளியான நூல்கள்:
சிறுகதைகள்: தீட்டு (2000)
அழகிய பெரியவன் கதைகள் (2002)
நாவல்: தகப்பன் கொடி (2001)
கவிதைகள்: நீ நிகழ்ந்தபோது (2000)
கட்டுரைகள்: வெட்கம் கெட்ட நாடு (2004)
நெரிக்கட்டு- அழகிய பெரியவன்
₹50.00Price

