Author: A.Madhavaiyah
மாதவையா ஆங்கிலத்தில் எழுதிய Thillai Govindan (1903) என்ற நாவல் சென்னையிலும் இங்கிலாந்திலும் வெளியானது. தம் சிறிய பாட்டனாரான மாதவையாவின் தில்லைக் கோவிந்தன் நாவலை அவரது நேரடிப் பார்வையில், தமிழ்நேசன் மாத இதழில் தமிழாக்கமாக மொழிபெயர்த்திருந்தார் வே.நாராயணன். அந்தத் தமிழாக்கம் மாதவையாவின் மறைவுக்குப் பின் 1944ல் தினமணி காரியாலய பிரசுரமாக வெளிவந்தது.
தீண்டாமையின் கொடுமை, குழந்தைமணக் கொடுமை, ஐரோப்பிய வாழ்க்கைமுறைக் கல்வியால் ஏற்படும் குழப்பம், சம்பிரதாயமான திருமணம், பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் தமிழ்க் குடும்பங்களில் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் போன்றவை இந்நாவலில் சித்தரிக்கப்பெற்றுள்ளன.
மேலைநாட்டார் தற்காலத் தமிழ்ப் பண்பாட்டை அறிந்து கொள்ளுவதற்காகவே ஆங்கிலத்தில் மாதவையா இந்நாவலை எழுதியதால், ஆங்கில நாவல்களுக்கே உரித்தான கச்சிதமான படைப்புத்திறம் இதில் வெளிப்பட்டுள்ளது. எனவே அவரது மற்ற தமிழ்ப் புனைகதைகளில் காணக்கிடைக்காத தொனி இதில் நிறைந்துள்ளது.

