Author: A.Madhavaiyah
பிரதாப முதலியார் சரித்திரம் (1870) என்ற முதல் தமிழ் நாவலுக்குப் பிறகு, விவேகசிந்தாமணி மாசிகையில் தொடராக ஆறு அத்தியாயங்களே வெளியான நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது மாதவையா எழுதிய சாவித்திரி சரித்திரம் (1892) என்ற நாவல். பால்ய விவாகம், விதவா விவாகம், பெண் கல்வி. பெண் விடுதலை பற்றிப் பேசிய முற்போக்கான விமர்சனக் குரல் இந்த நாவல் என்பதே இதற்குக் காரணம், பத்திரிகையில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும் இரண்டாவது தமிழ் நாவலாகவும் முதல் சமூக நாவலாகவும் கருதத்தக்கது இந்த சாவித்திரி சரித்திரம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இதே நாவல் முத்துமீனாட்சி (1903) என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. ஒரு பிராமணப் பெண்ணின் சுயசரிதை என்ற துணைத் தலைப்புடன் வெளியான இதுதான். இந்திய நாவல்களில் பெண்ணின் குரலாக. தன்மைக்கூற்று முறையில் வந்த, பெண் சுதந்திரத்தைப் பேசிய, சமூக சீர்திருத்த நாவல்களில் முதலாவது என்ற விமர்சனப் பாராட்டையும் பெற்றது. தேடிக் கண்டடைந்த சாவித்திரி சரித்திரத்தின் ஆறு அத்தியாயங்களுடன் முதல் முறையாக, முத்து மீனாட்சி நாவல் முழுமையாக இந்தப் பதிப்பின் மூலம் வெளிவருகிறது.
முத்து மீனாட்சி - அ. மாதவையா
10% Discount

