Author: T.Kannan
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்தியாவின் தேசத்தந்தை என்று பாராட்டப்படுகிறார். வாய்மையைக் கண்டறிவது என்கிற உயர்ந்த குறிக்கோளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தார். தனது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதின் மூலமாக இதை அடைய முயன்றார். மோகன்தாஸ் காந்தி ஓர் ஆழமான முன்னோடிச் சிந்தனையாளர்; நம் காலத்தின் எழுச்சியூட்டும் மனிதர்களில் ஒருவர். இந்த வாழ்க்கை வரலாற்று நூல் அவரது வாழ்க்கையைப் பற்றியும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்குபற்றியும், இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் இருபதாம் நூற்றாண்டில் நடந்த கணக்கற்ற பிற வன்முறையற்ற போராட்டங்களுக்கும் உந்துவிசையாக அமைந்த அகிம்சை முறையை அவர் எப்படி வளர்த்தெடுத்தார் என்பது பற்றியும் செறிவாக விவரிக்கிறது. காந்தி, வியப்பூட்டும் உன்னத மனிதர்; திறம்மிக்க தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர்: உண்மையை நாடியவர்; தன் நம்பிக்கைகளுக்காகவே உயிரைத் துறந்தவர்.

