Somadevar
இந்தியாவில் பைசாசி மொழியில் தோன்றிய குணாட்டியரின் பிருகத் கதையே மிகப்பழமை வாய்ந்த கதைத் தொகைநூல். மறைந்துவிட்ட இதிலிருந்து தோன்றியதுதான் சோமதேவர் எழுதிய பெருங்கதை நூலாகிய கதா-சரித்-சாகர் (கதைகளான ஆறுகள் எல்லாம் விழும் கடல்). உதயணன் மகன் நரவாகனதத்தனைக் கதைத்தலைவனாகக் கொண்டு. அவனைச் சுற்றிக் கதைகள் கோக்கப்பட்டுள்ளன. டாக்டர் வே.ராகவன் என்ற சமஸ்கிருதப் பேரறிஞர் அக்கதைக்கடலில் இருந்து முத்துக்களாகச் சில கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்நூலில் அளித்துள்ளார். கதைக்கடலில் காணப்படும் கதைகளுக்கும் சுவை வகைகளுக்கும் எடுத்துக்காட்டாக இக்கதைகள் பொறுக்கப்பட்டிருக்கின்றன. இந்நூலில் தரப்பட்டிருப்பதிலிருந்து முதல்நூலின் போக்கும் பொருட் செறிவும் படிப்போர் எல்லோருக்கும் ஓரளவு தெரியவரும்.
கதா சரித் சாகரம் - சோமதேவர்
₹170.00Price

