Author: Magudeswaran
சிறுதொகைக்கான முதலீட்டு வாய்ப்புகள் இன்று அரிதாகிவிட்டன. பத்தாயிரத்தை எங்கேனும் முதலீடு செய்யலாம் என்றால் நம் முன்னுள்ள வாய்ப்புகள் எவை? வங்கியைத் தவிர்த்து வேறு வழியில்லை. அல்லது வங்கி தரும் வட்டியளவுக்கு மீறிய பிற வாய்ப்புகளும் இல்லை. இவ்விடத்தில்தான் பங்குச் சந்தையானது தவிர்க்க முடியாத முதலீட்டு வாய்ப்பாகிறது.
புதிய பொருளீட்டு உலகத்தில் பங்குச் சந்தை அறிவு சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. அவ்வறிவினைப் பெறுவது என்பது முதலீட்டுச் சந்தை சார்ந்த அனைத்தையும் கற்பதாகும். முதலும் நிறைவுமான பல பொருள்களைப் பற்றித் தெரிந்திருப்பதாகும். அத்தகைய பலவற்றையும் அறிவதற்குத் திறப்பாகிறது இந்நூல்.
நல்ல தமிழில் உரிய விளக்கங்களோடு பலப்பல சந்தைசார் பொருள்களை விளக்கிப் பேசி பொறுமையாகவும் களிநயமாகவும் கற்பிக்கிறது இந்நூல். ஆசிரியரின் இருபதாண்டுச் சந்தையறிவு.
பங்குச் சந்தை பனுவல் - மகுடேசுவரன்
10% Discount

