விற்பனைத் துறை அனைத்துப் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தக்கூடியது. வணிக நோக்கில் உருவாக்கப்படும் எப்பொருளும், எச்சேவையும் விற்பனைக்காகவே என்பது அத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும். ஆனால் இன்று நமக்கிடையே விற்பனைத்துறை குறித்த குறைவான புரிதல் உள்ளது. அத்துறையின் திறன்கள் மெய்ஞானம் போல ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில், தன் வழியில் கண்டடைவதாகவே இருக்கிறது. விற்பனை என்பதும் திறன்சார் நுட்பத்தின் பகுதியே என்ற புரிதல் மிகக் குறைவே. திறன்சார் நுட்பங்கள் அனைத்தையும் போலவே அடிப்படைப் பாடங்களைக் கற்று, தொடர் நடைமுறைப்படுத்தல் மற்றும் கூடுதல் பயிற்சிகள் மூலம் மேம்படுத்திக் கொள்ளல் ஆகியவை விற்பனைத்துறைக்கும் பொருந்தும். இந்த அடிப்படைப் புரிதலோடு இந்நூலை வாசிப்பது கூடுதல் பயன் தரும்.
ஆட்டத்தின் ஐந்து விதிகள் - ஜா.ராஜ கோபாலன்
₹100.00Price

