Author: Magudeswaran
காணும் காட்சியெங்கும் கவின்வளம் கொஞ்சுகையில் எழுதுவனவற்றில் பாச்சுவை பரவித் திகழும். அதனோடு தமிழின் செம்மாந்த சொற்களைத் தேடிச் சேர்த்துக் கோத்தெடுத்தால் விளைவது மொழிவழிப்பட்ட பேரின்பம். சிறிதும் மாறாத நோக்கற்ற வடசொற்கலப்பு நடையே தமிழ்மொழிப் பரப்பில் கவிதைகளாய் உலா வந்தன. அந்தப் போக்கிற்கு மாற்றாக இத்தொகுப்பிலுள்ளவை தனித்தமிழ் நடைபயில்கின்றன. தமிழ்கூறு நல்லுலகு நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு வரவேற்கத்தக்க நன்முயற்சியே இத்தொகுப்பு.
மாச்செருநன்- மகுடேசுவரன்
₹180.00Price

