Author: Magudeswaran
90களின் தொடக்கத்தில் தம் 17ஆம் அகவையில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர் மகுடேசுவரன். இயல்பிலேயே தமிழாற்றல் வாய்க்கப் பெற்றவரான மகுடேசுவரனின் கவிதைகளில் மொழிவளத் திறனும் புதிய சொற்றொடர்களும் நிறைந்து ததும்புவதைக் காணலாம். அன்றாடம் காணும் ஓர் எளிய காட்சிகூட இவரது பார்வையில் வியக்கவைக்கும் கவிதையாகிறது. இவரது பதினான்காம் கவிதைத் தொகுப்பு இது.
முதல் மழைக்கே செழித்த பைங்கூழ்- மகுடேசுவரன்
₹100.00Price

