மாறி மாறி வருகின்ற மாற்றங்களைக்கண்டு வியந்து நிற்காமல் தனது பாதையில் தான் மட்டும் தனியாக நடைபோடுகிறார் டி.பத்மநாபன். அப்படித் தனிமைப்படுத்தப்பட்டபோது ஏற்படுகின்ற சுகமான வேதனைகள் -துயரங்களே பத்மநாபன் கதைகளின் அடிநாதம், உள்ளடக்கம் ஒரு சிறு பொறி மட்டுமே.
ஆயினும் கதைகள் காவியங்களைப்போல பிரகாசிக்கின்றன. சொற்கள் நதியில் மிதந்துவரும் விளக்குகளாகச் சுடர்விடுகின்றன. கதை முடியும்போது ஒரு வானம்பாடி பறக்கிறது...
சுடரும் சிறுமி - மா.கலைச் செல்வன்
₹180.00Price

