2009 வருடம் ஜூன் மாதம் 6 ஆம் நாள் காலமான ராஜமார்த்தாண்டன் குமரி மாவட்டத்தில் இடையன்விளை கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். எழுபதுகளில் 'கொல்லிப்பாவை இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர்.
கல்லூரிக் காலத்திலிருந்து கவிதைகளும் விமர்சனங்களும் எழுதி வந்தவர். தமிழ் புதுக்கவிதை வரலாற்றில் ஆய்வு மேற்கொண்டவர். புதுமைப்பித்தன் எழுத்துக்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 'புதுமைப்பித்தனும் கயிற்றரவும்' என்ற விமர்சன நூலை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் 'ராஜமார்த்தாண்டன் கவிதைகள்' என்ற முழுத்தொகுப்பாக வெளியாகியுள்ளது.
இந்நூல் எழுத்து காலத்திலிருந்து இன்றுவரையிலான புதுக்கவிதையின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து விரிவாக ஆய்வு செய்கிறது.
புதுக்கவிதை வரலாறு - ராஜ மார்த்தாண்டன்
₹240.00Price

