Author: Magudeswaran
நாமே பட்டு நாமே திருந்தி மேற்செல் வதற்கு வாழ்நாள்களை விலையாய்க் கொடுக்கவேண்டும். எடுத்துச் சொல்ல ஒருவர் இருந்திருப்பின் எங்கும் வழி தவறியிருக்கமாட்டோம்.
யாவுமறிந்த மூத்தோரின் சொற்களைத் துணையாய்க்கொண்டு நடந்து செல்லும்போதுதான் அனைத்தையும் அடைகிறோம். நல்வழிப்பட்டு நம்மை நாமே நடத்திச் செல்வதற்குக் கைவிளக்காகும் நற்சொற்களின் குறுந்தொகை இந்நூல். நம்மைச் சிறக்க வைக்கும் நூறு கட்டளைகள் இந்நூலில் உண்டு.
நல்வழிக் குறுந்தொகை- மகுடேசுவரன்
₹100.00Price

