Author: V.Amalan Stanley
'எல்லாம் மாறக்கூடிய தற்காலிகமே என்றறிந்த பிறகும் மனிதன் ஏன் புலன்வழித் துய்க்க விழைகிறான்' என்று ஒரு சீடன் கேட்க, புத்தர் கூறுகிறார். 'அது ஏனெனில், இவ்வாழ்வின் துய்த்தலில் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. அதன்பொருட்டே மனிதனின் விழைவு நீள்கிறது. அது இல்லாவிடில், யாவரும் இம்மனித வாழ்வைப் புறக்கணித்திருப்பர்' என்றார்.
பௌத்தத்தின் பாதை மாயையைக் களைவதாகும். அதுவே விழிப்படைவு, மெய்ஞ்ஞானம், மேலிருந்து வரும் சூரிய ஒளி, ஒரு வீட்டின் கிழக்குச் சன்னலில் பட்டு தரையில் விழுகிறது. அங்கு சன்னல் இல்லையெனில், அவ்வொளி தரையில் விழும். தரை இல்லையெனில், நிலத்தில் இருக்கும் நீரில் விழும். அதுவும் இல்லையெனில், அது எங்கும் விழாது நீண்டு போய்க்கொண்டே இருக்கும் (முடிவற்று). அதுவே, தியானத்தின் பயிற்சி, பாதை, முடிவற்ற (1) முடிவு அல்லது அடைவு.
பௌத்த சூத்திரங்களையும் சித்தர் பாடல்களையும் அறிவியலையும் இம் மனவிழிப்புநிலைத் தியானம் ஒன்றிணைக்கிறது.

