Author: V Amalan Stanley
ஆண் தேனீ ஒன்று கூட்டில் தனக்கான இருப்பைக் குறித்து மேற்கொள்ளும் ஆழ்ந்த தேடலைக் கூறும் உயிரோட்டமுள்ள குறுநாவல், சூழியல், மரபணுவியல் காரணிகளால் வரையறைக்குட்பட்ட வாழ் போக்கைத் தனது சொந்தத் தேர்வுகளால் மாற்றிக் கொள்ள எளிமையாகப் போராடும் ஒரு சிறு தேனீயின் எத்தனிப்புகளே இந்நாவலில் நிறைந்துள்ளன. இயல்பும் எளிமையும் கொண்ட இவ்வாழ்வில் துலங்கும் உன்னதங்களோடும் துயரங்களோடும் தொடர்கிறது அத்தேனீயின் பயணம். மரணத்தின். இழப்பின். அழிவின் விளிம்பைத் தொட்டுப் பட்டுத் தெளிவுறுகிறான்.
தன்னகத்தே செறிந்தூறும் பேரறிவும் பேரின்பமும் சாதாரண இவ்வாழ்வில் சுடரும் பேரிருப்பின் மிச்சங்களெனும் உள்ளொளித் தேடல் மனிதர்க்கு மட்டுமன்று. அது அத்தேனீயின் வாழ் பயணக் கண்டடைவுகளின் மூலமும் அவற்றின் வழியான மெய்ஞ்ஞானச் சுவையாகவும் சுட்டப்படுகிறது.
தேன்கமழ் பூவுலகு- வி. அமலன் ஸ்டேன்லி
₹190.00 Regular Price
₹171.00Sale Price
10% Discount

