Author: V Amalan Stanley
உலகமே தூற்றும் அவப்பெயருக்கு ஒருக்காலும் இடங்கொடுக்கக் கூடாதென் யூதாஸ் தன்னை மாய்த்துக் கொண்டாலும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இதுநாள் வரை அவனைப் பற்றிய அந்தக் கறை கதைகளாகித் தொடர்ந்து மனித மனங்களில் விலகாதிருக்கிறது.
அதே மரணத்தை அக வெளியின் மீறல்களையும் உன்னதங்களையும் கடந்து உட்பொருளுக்குள் விழிப்படையும் பிரக்ஞையாகவும் பார்க்க நம்மால் கூடும்.
என்றாலும் நிஜத்தில் அக்கொடுங்கூற்றுக்கு
அவன் பாத்தியதை உடையவன்தானா என்றொரு கேள்வி இப்புனைவின் வழி மண்வளைக்குள் நுழைந்தேகும் குளவியாய் நெஞ்சுக்குள் வந்து வந்து போகிறது.
ஒளவிய நெஞ்சம்- வி.அமலன் ஸ்டேன்லி
₹120.00Price

