Author: Kanmani gunasekaran
இலக்கியப் படைப்பாளியான கண்மணி குணசேகரன் பல்லாண்டுகள் உழைத்து இந்த அகராதியைத் தொகுத்திருக்கிறார். போக்குவரத்துத் துறைத் தொழிலாளியாகக் கடும் பணிச்சுமைகளுக்கு நடுவில் அயராது உருவாக்கியிருப்பது ஒரு தனிமனித சாதனைதான். பல்கலைக் கழகங்களின் கடமை இது.
இந்தச் சொற்களஞ்சியத்திற்கு மேலதிகச் சிறப்புகள் உண்டு. சொல், பழமொழி, மரபுத் தொடரை விளக்கச் சொற்றொடரை உருவாக்கும்போது ஒற்றை வரிக் கதையாக மாற்றி விடுகிறார். அது நகையுணர்வு மிக்கதாக, பிறிதுமொழிதலாக, குறிப்புணர்த்தலாக ஆகி இந்நூலுக்கு ஒரு கலை மெருகை ஏற்றியிருக்கிறது. நாகரீக மாற்றத்தில் நாட்டுப்புறம் இழந்துவிட்ட பண்பாட்டுக் கூறுகள், வாழ்முறை. வேளாண்முறை அனைத்தும் மீள் பதிவாகியிருக்கிறது.
ஒரு புனைவிலக்கியம் உருவாக்கக்கூடிய கிராமிய மனச்சித்திரத்தை இந்நூலும் தருகிறது.
நடுநாட்டுச் சொல்லகராதி- கண்மணி குணசேகரன்
₹480.00Price

