தனிமனிதனின், சமூகத்தின் ஆழ்விசைகளைத் தேடிச்செல்லும் படைப்புகள் இவருடையவை. ஆன்மா உடலிலிருந்து விடுபட்டுப் பறப்பதுபோல அடிக்கடி கனவு காணும். பிறகு அது கடும் திடுக்கிடலோடு உடலுக்குத் திரும்பிவரும். தனது ஒவ்வொரு கதையும் அவ்விதமான ஒரு அதிர்ச்சியைத் தனக்கு அளிப்பதாகக் கூறுகிறார்.
நீங்கள் கடும் குற்றம் ஒன்றைச் செய்துவிட்டுத் திரும்பும்போது இருள் மூலையில் நின்றுகொண்டிருக்கும் ஒரு உருவம் நீங்கள் கடக்கையில் தனது தொப்பியை எடுத்து தனது மரியாதையைத் தெரிவித்துவிட்டுத் திரும்ப அணிந்துகொள்வதை ஒருவேளை நீங்கள் கண்டால் அது போகன் சங்கராகவே இருக்கக்கூடும்.
மந்தைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியாகவே அவர் பாவத்தைக் கருதுகிறார். மீட்சி பாவத்தை வேண்டுகிறது. இருளைப் போல ஒளிக்குச் சரியான வழி வேறு கிடையாது.
திகிரி - போகன் சங்கர்
₹100.00Price

