Author: Maanaseegan
தமிழ் நிலத்தில் சகல சமூகங்களுடனும் கலந்து பழகி திராவிட அடையாளங்களை உள்வாங்கி வளர்கிற லிபரல் மனப்பான்மை கொண்ட ஒரு இஸ்லாமியனின் பார்வைதான் இந்த நூல்.
சூஃபியிசத்தை, வஹாபியிசத்தை, இந்த மண்ணின் அரசியலை இந்து மத அடிப்படைவாதத்தை, சாதி அடுக்குகளை அவன் எப்படிப் பார்க்கிறான் என்பது ஒரு சுவாரஸ்யமான கோணமாக இருக்கக்கூடும்.
இந்தப் புத்தகம் பேசும் அடையாள அரசியல் inclusive தன்மை கொண்டதாகவே இருக்கிறது.
ரங்கோலியில் தன்னை இழந்து விடாத ஒரு வண்ணம் பிற வண்ணங்களுடன் உறவாடிக்கொண்டே தன்னைப் பற்றி வரையும் சுய குறிப்பே இந்த நூல். மனித மனதை பால்யத்தின் நினைவுகளே வனைகின்றன. இந்நூல் பேச விழைகிற அரசியலையும் அதுவே தீர்மானிக்கிறது.
இளம்பிறைக்குள் ஒரு பூர்ணிமை- மானசீகன்
₹160.00Price

