காலத்தை அனுசரித்தே மாற்றம் இருக்கும் நிலையறிந்தே மனித மனதின் குணம் இருக்கும் தன்னிச்சையாய் யுவதியின் செல்லக் குறும்பு இருக்கும் விஸ்வதாபிராமா கேளடா வேமனை
கல்லில் உருவச்சிலை செய்து இருளில் வைத்து வணங்குவதால் பயன் இல்லை மூடர்களே! உள்ளத்தினுள்ளே இறை உயிர்த்திருப்பதை அறிக! விஸ்வதாபிராமா கேளடா வேமனை
சகல உயிர்களையும் சமமாகப் பார்க்கும் கருணை நிறைந்தவன் யோகி அவன் நீயேயன்றி வேறெவனும் இல்லை விஸ்வதாபிராமா கேளடா வேமனை
சகல உலகங்களிலும் அனைத்திலும் உறையும் அதுவே தாய் குழந்தைகளின் நடுவிலும் அன்பு உருவாய் நிலைத்திருப்பதைக் காண்பாய் விஸ்வதாபிராமா கேளடா வேமனை
வேமன மாலை - தமிழில்: மதுமிதா
₹180.00Price

