Author: Karthick Netha
நான் அரூப மலர்.
வெண்சுடரின் அடவு.
காலகால உயிர்ப்பு.
தனிமவுனக் கவனம்.
தன்னிலை அறிந்து
தவம் முனிந்த மூதறிவு.
உள்ளுணர்வின் பிரதித்வனி கணங்களை எரித்துத் திகழும் ஒளி அன்பே எனது அப்பியாசம்.
என் பாடல் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளும்.
விழிப்பின் இருப்பு.
ஒளியின் ஒருமை.
ஒருமையுள் முழுமை.
தனித்த தத்துவம்.
பழுத்த பக்குவம்.
நெருப்பிலும் நீந்தும் நித்யம்.
கவிஞன் யானொரு
கலா சூன்யம்.
ஞாலப் பெரிதே ஞானச் சிறுமலர்- கார்த்திக் நேத்தா
₹100.00Price

