Author: Karthick Netha
நெஞ்சு விழைந்ததோ அமுது.
கடையக் கிடைத்ததோ நஞ்சு.
நஞ்சே அவாவின் கசடு.
நினைவு என்பதோ
நச்சுக்கணம்.
நஞ்சுண்ட நெஞ்சின்
மாய்மாலமே எழுத்து.
கலையெலாம்
ஆலகால விடமுண்ட
நீலகண்டம்.
மத்துறு மம்மர்
மாநினைவு
நெரிய நெரியத்
திரியத் திரியக்
கடைந்த ஆழத்தில்
ஒன்றிய ஊழ்கத்தில்
பொன்னெனப் போற்றிய
பொய்ம்முகம்
மறைய மறையத்
தான்மை
அகல அகல
மையறு மனதில் சுவறும்
தூவெண்ணமுதம்.
தூவெண்ணமுதம்- கார்த்திக் நேத்தா
₹110.00Price

