Author: Pathasari
ஒருவர் தன்னைத்தானே வரைந்துகொண்ட சுயசித்திரம்தான் இது. ஆனால் காணும் பிறிதொருவருக்கு முகம்காட்டும் நிலைக்கண்ணாடியாக உருமாறிவிடுகிறது. மந்தியும் அறியா மரம்பயில் கானகத்தில் நடக்கும் வியப்போடும் கவனத்தோடும் ஒவ்வொரு வரியையும் கடந்துபோக வேண்டியிருக்கிறது. கவிதையாலும் எட்டவியலா மொழியின் உச்சங்கள் சட்டென்று எதிர்ப்பட்டுவிடக்கூடும். எந்தவொரு கணத்திலும் ஒரு தத்துவ விசாரணைக்கு ஆளாக வேண்டியிருக்கும். குற்றஉணர்ச்சிக்கு ஆளாகவும் அதேவேகத்தில் விடுபடவும் இயலும், அகத்தின் அழகு எழுத்திலும் தெரிகிறது. நிழலும் ஒளிரும் மனம்...
அன்பின் வழியது உயிர் நிழல்- பாதசாரி
₹65.00Price

