Author: Shrirangam V.Mohanarangan
கவிதை தத்துவம், விஞ்ஞானம், ஆன்மிகம் ஆகிய புலங்களில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர் ஸ்ரீரங்கம் மோகனரங்கள். ஸ்ரீரங்கத்தில் பிறந்த இவர் குமுகாய இயல், இயற்பியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர். இந்தியன் வங்கியிலிருந்து ஓய்வு பெற்று ஸ்ரீரங்கத்தில் வாழும் இவர் பல துறைகளிலும் ஆர்வம் கொண்டு படிப்பும். எழுத்தும், சிந்தனையும் என்று வாழ்பவர். தம்மை என்றுமே ஒரு நல்ல மாணவர் என்று சொல்லிக்கொள்ளும் இவருடைய நூல்கள் உணர்வின் உயிர்ப்பு (கவிதைகள்), காற்றுகளின் குரல் (உலகக் கவிதைகள் ஒரு நூறின் மொழிபெயர்ப்பு), அறிவும் நம்பிக்கையும். பாரதிக் கல்வி மற்றும் வைணவ உரைவளம், இந்துமதம் ஆகியன குறித்த அறிமுக நூல்கள், பல சமயங்களில் தமிழினி, கணையாழி சொல்வனம் மற்றும் இணையத்தில் தமது வலைப்பக்கத்திலும் இவர் எழுதி வந்திருக்கும் கட்டுரைகள் இவை. இலக்கியம். தத்துவம், மொழி. கவிதை போன்ற துறைகள் சார்ந்த சிந்தனைகளை முன்னிறுத்துபவை இந்தக் கட்டுரைகள். நெடிய உழைப்பும், ஆழ்ந்த சிந்தனையும், தேர்ந்த மொழியில் உரைத்தலும் இவர்தம் உரைநடையின் சிறப்புகள் எனலாம்.

