Author: Shrirangam V.Mohanarangan
கல்வி என்பது கண் திறக்கும் அறிவேயாகும் பாரதி ஒரு கல்வி பாரதியைப் புரிந்துகொண்டால் பல விஷயங்களை நாம் புரிந்து கொள்கிறோாம். புரிந்துகொண்டால்தான் பாரதியைப் புரிந்துகெர்ளிளவும் முடிகிறது. பாடலாசிரியன், கவிஞன், கட்டுரையாளன். பத்திரிக்கையாளன், கதைசொல்லி என்பதையெல்லாம் மீறி அவனுடைய உள்ளியல்பில் சிந்தனையாளன் என்ற பரிமாணத்தை உன்னிப்பான அவதானத்திற்கு இந்நூல் கொணர்கிறது. உணர்ச்சி மயமாக கனவுகளில் திரிதருவோன் என்ற வழக்கமான பிடித்து வைத்த எண்ணத்திலிருந்து நாம் மாற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இந்நூல் யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, கடந்த காலத்தின் நன்மைகளில் எதுவும் சேதாரம் ஆகாமல். நாட்டின் நலந்திகழ் எதிர்காலம் நனவாக வேண்டும் என்று கனவு கண்டவன் பாரதி என்று நிறுவுவது இந்நூலின் பயன்.
பாரதிக் கல்வி- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
₹80.00Price

