Author: Arun narasimhan
சிறுகதை என்பது சம்பவமோ வாழ்க்கை விள்ளலோ அனுபவப் பகிர்வோ நினைவோட்டமோ சார்ந்த நீதிகளோ மட்டும் அல்ல. நாவலைப் போலவே அவை முழுமையான அனுபவத்தை, அதிலிருந்து எழும் மேலதிகமானப் பொருளை உணர்வுகளை வழங்க முற்படவேண்டியது அவசியம். சிறுகதையாகச் சொல்லப்பட்டவை வேறு சிறு பெரு வடிவங்களில் திறம்பட அளிக்க முடியாதவை. அவசியமில்லாதவை.
இத்தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. போர்ச்சுகல் நாட்டில் இரண்டு நாட்களில் நடப்பவற்றை இருபது பக்கங்களில் சொல்லும் கதையில் தொடங்கி, அரங்கம் அமெரிக்கா இருபதாண்டுகளில் நடப்பவற்றை இரண்டு மூன்று பக்கங்களில் சொல்லும் கதையில் முடிகிறது. கேட்காத இளையராஜா கச்சேரிப் பின்னனியில், கேட்கும் கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பின்னனியில், நகரத்தில், அரங்கத்தில் என்று வகைந்து, பிரெஞ்சு நாட்டு பாண்ட் அவன் சிற்றூரில் 1888இல் ஓவியர் பவுல் கவ்கின் பெற்ற தரிசனமும் வரலாற்றுப் புனைவாக இத்தொகுப்பினுள் உள்ளன. நடுவில் பேயே வராத ஒரு பேய்க் கதையும் உண்டு.

