Author: Arunn narasimhan
இல்புறம் என்று உருவாக்கப்பட்டுள்ள சொல் இல்லறம் என்பதற்கு எதிர்ப்பதம் இல்லை. மனது ஒவ்விச் செய்ய விரும்புவது அறம். மனங்கள் ஒவ்விப் பழகுவது இல்லறம். ஒவ்வா மனங்கள் நாடுவது இல்புறம்.
இல்லறம் வழங்கும் ஒருவனுக்கு ஒருத்தி வகை ஆனந்தம் வரையறுப்பதால் வற்றிவிடுவதா. பன்னாட்டு மென்பணி நிறுவன மேலாளர் விவேக் ஆசைப்பட்டு மணந்த வாசுகியை நடுவயதில் விடுத்து அவள் தோழி விவிதாவை நாடியது இவ்வகையில். இந்தச் சமகால இல்புறத்தில் கோவலன் தண்டனை பெறுவது கண்ணகியிடமா மாதவியிடமா?
பள்ளித் தலைமை ஆசிரியை வைதேகிக்கு இல்லறம் அளித்திருக்க வேண்டிய ஆனந்தம் கணவன் 'சாப்டுவேர் கூலி' வருணிடம் வற்றிவிட்டதில் அவள் தன்னுடைய மாணவனிடம் இல்புறம் பழகலாமா. இந்தச் சமகால இல்புறத்தில் சபிக்கப்பட்டது அகலிகையா முனிவரா?
இல்புறம் - அருண் நரசிம்மன்
₹690.00Price

