Author: Rajendra chozhan
திராவிடம், மார்க்சியம். தமிழ்த் தேசியம் ஆகிய சொல்லாடல்கள் குறித்த தவறான, ஆதிக்கம் சார்ந்த கட்டமைவுகளை, சிந்தனைகளிலிருந்து விடுபடவைத்து இச்சொல்லாடல்கள் குறித்த அறிவியல் பூர்வமான புரிதல்களை ஏற்படுத்தத் துணைபுரிகிறது இந்நூல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்வழி தமிழகத்தின் அரசியல், பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகள் எவ்வாறு பறிபோகின்றன, இவை சார்ந்த அதிகாரங்கள் அனைத்தும் தில்லிப் பேரரசிடம் குவிக்கப்பட்டு தமிழகம் எவ்வாறு தில்லியின் கொத்தடிமை ஆக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்நூல் விளக்குகிறது.
தற்போது தமிழக அரசியல் சூழலில் விவாதப் பொருளாக பவனி வரும் தன்னுரிமை, தனி நாடு மாநில சுயாட்சி ஆகிய சொல்லாடல்கள் குறித்தும் இந்நூல் விவாதிப்பதோடு இவை பற்றிய தருக்கபூர்வமான. கோட்பாட்டு ரீதியான தெளிவுகளையும் ஏற்படுத்துகிறது.
திராவிடம், மார்க்சியம், தமிழ்த் தேசியம் - இராசேந்திர சோழன்
₹90.00Price

