Author: Rajendra chozhan
ஆதிக்க சக்திகள் தங்கள் நலம் காக்கும் கருத்தியலை அனைத்து மக்கள் நலம் காக்கும் கருத்தியல் போல் சித்தரித்து தங்களைத் தற்காத்து வருகின்றன.
இவ்வாறே அரசு பொறியமைவின் அடக்குமுறைக் கருவிகளான நாடாளுமன்றம், சட்டம், காவல், நீதி, சிறைச்சாலை ஆகியன பற்றிய கருத்துகளும் கட்டமைக்கப்பட்டு நிலவுகின்றன. இதனடிப்படையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரம்புக்குட்பட்ட ஜனநாயகம், விழிப்புற்ற மக்களால் மீறப்படும்போது அரசுப் பொறியமைவுகள் அதன் உண்மை முகத்தைக் காட்டி அடக்குமுறையில் இறங்குகின்றன.
இந்த எளிய உண்மையை நோக்கிய பயணத்தில் தொடக்கநிலையாக முதன்முறை சிறை சென்ற ஒரு சாதாரண இளைஞனின் அனுபவப் பதிவுகளே இந்தப் பதியம்.
பதியம் - இராசேந்திர சோழன்
₹240.00Price

