top of page

நவீன தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில், அதன் வளர்ச்சிப் போக்கில், பாரதியின் இலக்கியப் பார்வையைவிடவும் புதுமைப் பித்தனின் பார்வையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரதி லட்சியவாதி. அதனால் மிகுந்த நம்பிக்கைவாதியும்கூட. எனவேதான் சுதந்திரம் கிடைப்பதற்கும் கால் நூற்றாண்டுக்கு முன்னரேயே அவரால் 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்ற பள்ளுப் பாடமுடிந்தது. தேசியம், தெய்வபக்தி, தர்மசாஸ்திரங்கள், நமது பாரம்பரியத்தின் மீதான பெருமிதம் யாவற்றையும் யாதொரு சந்தேகமும் இல்லாமல், எவ்விதக் கேள்விகளுமின்றி அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. புதுமைப்பித்தனோ யதார்த்தவாதி. அதனால் லட்சியவாதத்தை முற்றாக நிராகரித்தவர். எதையும் முற்றாக ஏற்றுக்கொள்ளவோ, நிராரிக்கவோ செய்யாமல் கேள்விகளை எழுப்பிப் பரிசீலனைக்குட்படுத்தியவர். தேசியம், தெய்வபக்தி எல்லாவற்றையுமே கேள்விக்குள்ளாக்கியவர். இலக்கியத்தில் தர்மம் வெற்றி பெறுவதால் வாழ்க்கையிலும் அப்படியே ஆகிவிடுமோ என்று கேட்பவர். இதனால்தான் இன்றைய நவீன தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையில் பாரதியை விடவும் புதுமைப் பித்தன் முக்கியமானவராகிறார்.


ஒருவகையில் நவீனத்துவத்தை மீறி இன்று எழுதப்படும் புதுவகை எழுத்துகளுக்கும்கூட புதுமைப்பித்தனே முன்னோடியாகிறார்.

புதுமைப்பித்தனும் கயிற்றரவும்- ராஜமார்த்தாண்டன்

₹70.00 Regular Price
₹63.00Sale Price

10% Discount

Quantity

    ​For enquiries please reach out to us.

         No 63, Nachiammai Nagar,

         Selavoyal,

         Chennai - 600051

         Phone : 9884225551

                        9884225576

    Find more information about
    our online store & policies below

    bottom of page